இஸ்ரேலின் இராணுவம் காசாவிற்கு தரைவழியாக உதவிகளை அனுப்பும்படி சில நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், அந்த நாடுகள் இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டன.
இஸ்ரேலிய செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியின்படி, இஸ்ரேல் கொடுக்கும் வாக்குறுதிகளின்படி, உதவிகள் தேவைப்படுவோருக்குச் சரியாகச் சென்று சேரும் என்று அந்த நாடுகள் நம்பவில்லை.
ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் கடந்த மாதம் முதல் காசாவிற்கு வான்வழியாக உதவிகளை அனுப்பி வருகின்றன.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இந்த முறையை எதிர்த்து வருகின்றன.
விமர்சகர்கள், இந்த வான்வழி உதவிகள் தேவையான அளவை ஒப்பிடும்போது மிகவும் குறைவானவை என்றும், பாலஸ்தீனியர்கள் அந்த உதவிகளைப் பெற அடித்து பிடித்துச் செல்வது அவர்களுக்கு இழிவானது என்றும் கூறுகின்றனர்.
மேலும், இந்த வான்வழி உதவிகள் ஆபத்தானவையாகவும் மாறியுள்ளன.
நேற்று (10) 15 வயது சிறுவன், வான்வழியாக வீசப்பட்ட ஒரு உதவிப் பொதி அவன் மீது விழுந்ததால் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.