உலகம்

இஸ்ரேல் – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் புதிய வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம்

(UTV|அமெரிக்கா)- இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபுதாபி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும்” என்று கூறியுள்ளனர்.

இந்த உடன்பாட்டின் விளைவாக, ஆக்கிரமிப்பு மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை இஸ்ரேல் இடைநிறுத்தும்” என்றும் அந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அடங்கினார் இளவரசர் சார்லஸ்

காஸா போர் நிறைவா? பிரான்ஸ் ஜனாதிபதியின் அழுத்தம்

ஆண்மையை நீக்கிடுங்க : பாகிஸ்தானின் சட்டம்