உலகம்

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வியடையும் – எச்சரித்துள்ள நிபுணர்கள்.

(UTV | கொழும்பு) –

ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வியடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் எல்லைக்குள் நுழைந்த பலரை பிணை கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசாங்கம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து 14-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் இராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் இராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதனால், தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த முனைந்துள்ளது. எனினும், ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வியடைய கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் அடர்த்தி நிறைந்த அந்த பகுதியில், சுரங்கங்கள் அதிக அளவில் ஒரு இணையம் போல் செயல்படுகின்றன. தரை பகுதி வழியேயான இஸ்ரேலின் தாக்குதல் சவாலான ஒன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், ஹமாஸ் போராளிகள் தரைக்கு அடியில் விரிவான சுரங்கங்களை அமைத்துள்ளனர். இதனால், இஸ்ரேல் தோல்வியடைய கூடும் என நிபுணர்கள் பலர் எச்சரித்துள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவிக்கையில், சுரங்க இணைப்பு பகுதிகளை தாக்கி வருகிறோம். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்!!

‘உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் மேற்கத்திய நாடுகள்தான்’

பெண் உரிமையை நசுக்கும் தலிபான்