உள்நாடு

இஷாரா செவ்வந்தியை இன்றும் விசாரணைகளுக்காக அழைத்து சென்ற பொலிஸார்

இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை அவர் தலைமறைவாகியிருப்பதற்கு உதவிகளை வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தொிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றது.

இதனிடையே களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் கம்பஹா பாபா, கெஹெல்பத்தர பத்மேவின் தந்தையிடமிருந்து பத்மேவை அடையாளம் கண்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பிலும் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கம்பஹா ஒஸ்மானை கொலை செய்வதற்காக துப்பாக்கிதாரிகள் பயணித்த கெப்ரக வாகனத்தை பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் தம் வசம் வைத்திருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர் -அதாங்கத்தில் முரளி.

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!

இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்!