உலகம்விசேட செய்திகள்

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (14) நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல் – WHO

பிரதமர் ஹரிணியை அவசரமாக சந்தித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

editor

மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் உறுதி