உள்நாடுபிராந்தியம்

இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

“இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது (25) நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் இளைய தலைமுறையினரை விழிப்புணர்வூட்டுவதன் மூலம், இலங்கையில் வாழ்ந்து வரும் முதியோர்களின் நன்னிலையினை மற்றும் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாக்கும் நோக்குடன் மேலும் முதியோர்களுக்கு ஆத்ம கௌரவம், சுதந்திரம் மற்றும் மரியாதையுடன் வாழும் வாய்ப்பினை வழங்கும் நோக்குடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உடற்பயிற்சி, தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள் குறித்து,
வைத்தியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களால் இதன்போது வழங்கப்பட்டது.

மேலும் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் அறிமுகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ் அவர்களாலும், தலைமைத்துவப் பண்புகள் மூலம் இளைஞர்களை மேம்படுத்துதல் பற்றி மாவட்ட செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.நுஸ்ரி அவர்களாலும் தெளிவூட்டப்பட்டது.

இதன்போது மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம் இர்பான் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

-ஹஸ்பர் ஏ.எச்

Related posts

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை

editor