வகைப்படுத்தப்படாத

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்

(UTV|COLOMBO) – பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்தோர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனையடுத்து அவர்கள் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள உயரதிகாரிகளின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இளவரசர் வில்லியம் நாளை மாலை ஒரு சிறப்புரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணங்களின் போது தம்பதியினரின் பாதுகாப்பிற்காக 1,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கைகளை வெட்டிக் கொண்ட 41 மாணவர்கள்!!

Fair weather to prevail in most of Sri Lanka

එංගලන්තය සහ නවසිලන්තය සමඟින් 2019 ලෝක කුසලාන තරගාවලිය අදයි