உள்நாடு

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று (9) மதியம் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சட்டத்தை அமுல்ப்படுத்தாமல் இருக்க கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியும் மற்றொரு அதிகாரியும் சந்தேக நபர்களிடமிருந்து 200,000 ரூபாய் இலஞ்சம் கோரியிருந்தனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பத்தில் 20,000 ரூபாவை பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள 180,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ள சென்ற போது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தலைமறைவான பொலிஸ் அதிகாரி மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய பிற தரப்பினரைக் கண்டறிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

புதிய நியமனங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்