நாடளாவிய ரீதியில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பதவிக்கு 170 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
23 பேருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;
சில திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் ஆராயப்படும்.
நாட்டில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான 170 வெற்றிடங்கள் நிலவுகின்றன.
விரைவில் அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நாடு அரசியல்வாதிகளுக்கு உரிமையான நாடு அல்ல. இது மக்களுக்கே உரிமையானது.
அந்த வகையில் சேவை மனப்பான்மையுடன் கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரதி பலன்களை எதிர்பாராமல் சேவையை வழங்குவது மரண விசாரணை அதிகாரிகளின் பொறுப்பு.