வகைப்படுத்தப்படாத

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்

(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் சிக்கலான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக  நீதியமைச்சர் தலதா அதுகோரல வினால் முன்வைக்கப்பட்ட ஈலோசணை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்ப மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான கயந்த கணாதிலக்க தெரிவித்தார்.
அவர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்  மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமின் மூலம் வழக்குகளை விசாரிக்கக் கூடிய மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படும். இதற்காக சட்ட வரைஞர் திணைக்களம் பிரேரணையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரேரணை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அங்கீகாரத்திற்காக சமர்பிக்கப்பட்டுள்ளதென அமைச்சரவை பேச்சாளர் மேலும் கூறினார்.

Related posts

Malinga seals Sri Lanka win in his Final ODI

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் இலங்கை கண்டனம்

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!