விளையாட்டு

இலங்கையை வீழ்த்தியது ஆஸி

(UTV | கொழும்பு) – உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 22ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலன்க 35 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் எடம் சாம்பா 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 155 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 65 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக எடம் சாம்பா தெரிவு செய்யப்பட்டார். (12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்கள்)

இந்த வெற்றியின் மூலம், இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, குழு ஒன்றில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை அணி, இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று, 2 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

Related posts

நோவக் ஜோகோவிச் இற்கு வெற்றி

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்

உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது – ஸ்டார்க்கை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்

editor