உள்நாடு

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்துக்குஇதுவரை 697 மில்லியன் ரூபா

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்துக்கு’ இதுவரை 697 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நன்கொடைகள் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூறுகிறார்.

இதில், இலங்கை வங்கிக் கணக்கு மூலம் 635 மில்லியனும், மத்திய வங்கிக் கணக்குகள் மூலம் 61 மில்லியனுக்கும் அதிகமான தொகையும் கிடைக்கப் பெற்றுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

33க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நன்கொடையாளர்களிடமிருந்து 30,470 பல்வேறு வைப்புத் தொகைகள் மூலம் இந்தத் தொகை பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்க மாட்டேன் – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்

editor

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு