உள்நாடு

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 245,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை, இதன் விலை 240,500 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 260,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 265,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

IMF க்கு அடிபணிந்தே வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி