உள்நாடு

இலங்கையில் திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கெரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 240,500 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, இதன் விலை 246,000 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை, 266,000 ரூபாவாக இருந்த “24-கெரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 260,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கைக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ள புரெவி புயல்

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்ய அனுமதி

editor

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை