உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் வருகை தந்து தாய் நாட்டுக்கு திரும்ப முடியாதிருக்கும் இந்தியர்களை நாளை மறுதினம் (01)நாட்டிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக சுமார் 700 இந்தியர்களுடன் ஜூன் முதலாம் திகதி ஜலஸ்வா கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் நோக்கிச் செல்லவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இவர்களின் தேவைகளின் அடிப்படையில் பயணத்திற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாட்டில் தொழில் புரியும் பணியாளர்களுக்கு பத்து மில்லியன் வீட்டுக்கடன்

பகிரங்க விவாதத்திற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு ஜனாதிபதி அழைப்பு

ஆட்சிக்கு வந்த பின் நீதியை நிலைநாட்டுவோம் என்க வெட்கமில்லையா – கடுமையாக சாடிய ஹரீன்