உள்நாடு

இலங்கையில் இன்றும் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது.

செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 350,000 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை

ஜனாதிபதியின் மாமியார் கலிபோர்னியாவில் காலமானார்

நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

editor