உள்நாடு

இலங்கையில் அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று (23) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளது.

செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 277,500 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 300,000 ரூபாயாகவும் காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 279,300 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 302,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 257,200 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 278, ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்

வாதுவை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு