அரசியல்உள்நாடு

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர்,

12 வயதுக்குட்பட்ட எந்தவொரும் சிறுவரும் கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கத்திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, அதிகப்படியான திரை நேரம் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் சிறுவர்களை பாதுகாப்பதையும், ஆரோக்கியமான சிறுவர் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related posts

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

பிள்ளையான் செய்ததாக கூறப்படும் கொலைகளின் பிரதான துப்பாக்கிதாரி கைது

editor