இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம், உணர்திறன் மிக்க குழுக்களுக்கு (sensitive groups) ஆரோக்கியமற்ற மட்டத்தை எட்டியுள்ளது.
எனவே சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
