உள்நாடு

இலங்கையின் அபிவிருத்திக்காக $50 மில்லியன்

(UTV | கொழும்பு) – இலங்கையின் உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் உலக உணவுத் திட்டத்தின் கீழ் அவசர உதவியாக 22 மில்லியன் டொலர்களை உடனடியாக விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் 3 மில்லியன் இலங்கையர்கள் பயனடைவார்கள்.

மேலும், 2022-23 காலப்பகுதியில் இலங்கைக்கு மேலும் 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த பணம் சுகாதார சேவைகள், பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும்.

எஞ்சிய 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் இலங்கைக்கு வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே விளக்கமறியலில்

editor

அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

editor

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி