விளையாட்டு

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண சர்வதேச கிரிக்கெட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – 2018ம் ஆண்டு நடைபெறும் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன.

இந்தியாவும் பங்களாதேஷிம் இந்தப் போட்டிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை உறுதிப்படுத்தியிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சுற்றுத்தொடரின் போட்டி அட்டவணை, மைதானங்கள் மற்றும் கலந்துகொள்ளவுள்ள அணிகளின் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் உறுதிப்படுத்தப்பட்டு எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படவுள்ளது.

Related posts

இலங்கை அணி 144 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?

ஒலிம்பிக் 2021 இரத்தாக அதிக வாய்ப்பு

இலங்கைக்கு மற்றொரு பதக்கம்