கிசு கிசுசூடான செய்திகள் 1

இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ள செல்பி புகைப்படம்…

(UTV|COLOMBO) மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலை முன்னால் நேற்று அதிகாலை 1.35 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்தனர்.

தனியார் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களுள் பெண்கள் மூவரும், குழந்தைகள் மூவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வேனின் சாரதி வேககட்டுப்பாட்டை இழந்தமையே, இந்த விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குடும்பமாக நுவரெலியாவில் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மிகவும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

Related posts

ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

Shafnee Ahamed

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்

டிக் டாக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்?