அரசியல்உள்நாடு

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு ஹெலியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று – சபையில் ஆரம்பம்.