உள்நாடு

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதத்தில், 126,379 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்களில் 37,179 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,692,902 என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

உப்பு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

editor

கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

கொரோனாவால் தொழிலை இழந்த தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு [VIDEO]