வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கு வரவுள்ள பிபா கிண்ணம்

(UTV|COLOMBO)-ரஷ்யாவில் அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள உலக கிண்ண கால் பந்து போட்டியின் கிண்ணத்தை முதலில் பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையின் விளையாட்டு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

போட்டிக்கு முன்னதாக 54 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ள அந்த கிண்ணம் முதலாவதாக இலங்கைக்கு எடுத்து வரப்பட உள்ளது.

ஜனவரி மாதம் 23ம் திகதி அந்தக் கிண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பெற்றுக் கொள்ளப்பட்டு 24ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விஷேட கூட்டம் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மென்செஸ்டரில் இடம்பெற்ற தாக்குதலால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

Sri Lanka likely to receive light rain today

இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு