உள்நாடு

இலங்கைக்கு அடுத்தாண்டு கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு பெற்றுகொடுக்க தீர்மானித்துள்ள, கொரோனா தடுப்பூசிகளை நோய் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதாவது, நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு என்பவற்றுடன் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி, ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசிகளை முதலில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை அடுத்த ஆண்டு முதற்பகுதியில் இலங்கைக்கு இலவசமாக பெற்றுகொடுக்க, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

“நாம் 200” நிகழ்வு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் – ஜீவன் தொண்டமான் அழைப்பு.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!

editor

முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் – பேருந்தின் சில்லில் சிக்கி பலியான சோகம்

editor