சூடான செய்திகள் 1

இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்: பல பகுதிகளில் தங்கம்

 

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் பல பகுதிகளில் தங்கம் உட்பட பல கனிம வளங்கள் நிறைந்திருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

தங்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கில் போர் முடிவடைந்த பின்னர், எல்லை கிராமங்களின் கனிம வளங்களை ஆராய்வதற்காக முதலீட்டு சபை (BOI) வெளிநாட்டு முதலீட்டைப் பெற்று வருவதாக பணியக இயக்குனர் ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தங்க ஆய்வுக்காக சேருவில, மத்துகம, பெலவத்த போன்ற பகுதிகளில் வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கப்பட்ட ஆய்வு அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

Related posts

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி