இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீலுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் உள்ள மஹிந்த அவர்களின் இல்லத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
குறித்த சந்திப்பின் போது, இலங்கை நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான நீடித்த நட்பை நினைவுகூரும் வகையில், சுமூகமான கலந்துரையாடல் நடத்தினர்.
கடந்த காலத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவு கூர இந்த வாய்ப்பை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொண்டனர்.
