உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி

(UTVNEWS | COLOMBO) –அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதியான இன்றுவரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 9.3 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அதன் தாக்கம் நாணயங்களின் மீது அழுத்தம் செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்தினது விலைகளும் அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாராளுமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் சம்பவம் தொடர்பில் விசாரணை

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு