அரசியல்உள்நாடு

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் கவனம்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, இந்தக் கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும்.

இந்த இணையவழி கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக (USTR) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை.

மேலும் நான்கு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் தீர்மானம் ?

editor