இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயன்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படுவதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மின்சாரத் துறையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
