சூடான செய்திகள் 1

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையே மூன்று உடன்படிக்கைகள்

(UTV|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்த விசேட மூன்று உடன்படிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையில் இன்றைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளன.

அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்துள்ள நிலையில், இதன்போது அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மேற்கொண்ட விசேட கோரிக்கைக்கு அமைய காவல்துறை திணைக்களத்திற்காக புதிய ஜீப்வண்டிகள் நூறை வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

 

Related posts

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

மக்கள் நிர்க்கதி நிலையிலுள்ள வேளையில் காக்கைகளும் மைனாக்களும் மீண்டும் எழ முயல்கின்றன-  சஜித் பிரேமதாச