சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை குறைத்தது

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் நிதிச்சபை இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கு இடையில் பரிவர்த்தனை செய்யப்படும் கொள்கை வட்டி விகித அடிப்படை அலகுகளை 50 சதவீதத்தால் குறைக்க நேற்று (30) தீர்மானித்தது.

அதன்படி , நிலையான வைப்பு வசதி விகிதம் நூற்றுக்கு 7.5 சதவீதமாகவும் , நிலையான கடன் வசதி விகிதம் நூற்றுக்கு 8.5 சதவீதமாகவும் காணப்படும்.

வணிக வங்கிகளினூடாக தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் கடன் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி இன்று மனு

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் படுகாயம் | வீடியோ

editor

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…