உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

(UTV|கொழும்பு) -இந்த வருடத்தின் இறுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 6 ஆயிரம் பேருந்துகள் காணப்படுவதாகவும் அதில் 2 ஆயிரம் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் காணப்படுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் 36 முதல் 56 வரையிலான ஆசனங்களை கொண்ட 400 பேருந்துகளையும் 26 ஆசனங்களை கொண்ட 100 பேருந்துகளையும் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

இலங்கை பாராளுமன்ற பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை!

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

கொழும்பிலிருந்து வந்த பஸ்ஸை பயனிகளுடன் கடத்தி, மயானத்திற்கு அருகில் விட்ட நபர்!