உள்நாடு

இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை PCID என்ற பெயரில் ஆரம்பிக்கவுள்ளது

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றச் செயல்கள் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துச் சட்டத்தின்படி இந்த விசாரணை பிரிவு தொடங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இன்று (23) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

PCID என்ற குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஊடகங்களிடம் கருத்துரைத்த பிரதி பொலிஸ்மா அதிபர், விரைவில் தொடங்கப்பட உள்ள புதிய விசாரணைப் பிரிவு, பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விசேட நடவடிக்கைகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் 4.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் கூறினார்.

அவற்றில் கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள், காணிகள், நகைகள், படகுகள் மற்றும் 57 மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடங்கியுள்ளன.

அதன்படி, பணமோசடிச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

Related posts

சிறுமி விற்பனை விவகாரம் : வெளிநாட்டு பிரஜையும் சிக்கினார்

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது

“இந்நாட்டுக்கு தற்பெருமை தேவையில்லை” – சஜித்