உள்நாடு

இலங்கை பணியாளர்கள் வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் குவைத்தில் இருந்து வௌியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தினை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான குவைத் தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதேவேளை, குவைத்தில் தங்கியுள்ள குறித்த இலங்கை பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு குவைத் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பணியாளர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

இலங்கை அரசு ரிஷாதை தடுத்து வைத்திருப்பதன் நோக்கம்?

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி

editor