வணிகம்

இலங்கை – பங்களாதேஷுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஷுக்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையில் வர்த்தக, பொருளாதார மற்றும் பலதுறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா

சுற்றுலா அபிவிருத்தி வலயமாக நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய திட்டம்