விளையாட்டு

இலங்கை – நெதர்லாந்து இடையே இன்று தீர்க்கமான போட்டி

(UTV |  மெல்போர்ன்) – ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான முக்கியமான போட்டி இன்று (20) அவுஸ்திரேலியாவின் ஜீலாங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் சுற்றில் நெதர்லாந்து அணி “ஏ” பிரிவில் முன்னிலை வகிக்க, நமீபிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

அந்தப் பட்டியலில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் காரணமாக சுப்பர் 12 போட்டிக்கு தகுதி பெற இலங்கை அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம்.

எனினும் வேகப்பந்து வீச்சாளர்களான டில்ஷான் மதுசங்க, துஷ்மந்த சமிர மற்றும் தனுஷ்க குணதிலகதா ஆகியோர் காயம் காரணமாக இவ்வருட உலகக் கிண்ணத்தில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன்படி, பினுர பெர்னாண்டோ, கசுன் ராஜித மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் இலங்கை அணிக்கு மாற்று வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

119 ஓட்டங்களை பெற முடியாமல் சுருண்ட மும்பை அணி

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவுக்கு