வகைப்படுத்தப்படாத

இலங்கை தொடர்பிலான அறிக்கை இன்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் சமர்பித்து இன்று உரையாற்றவுள்ளார்.

இந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது.

வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, விசேட திட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் உள்ளூராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இதற்கு மேலதிகமாக வௌிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான ஒருங்கிணைப்பு செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி காரியலய அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?

சித்திர போட்டியில் வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அமைச்சர் ராதா கலந்துகொண்டு வழங்கிவைத்தார்

dengue: Over 29,000 cases reported island-wide