இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளார்.
சீவலி அருக்கோட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.