வகைப்படுத்தப்படாத

இலங்கை கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று கடத்தல்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கொடியுடன் பயணித்த டுபாய் நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் வைத்து சோமாலிய கடல்கொள்ளையர்களால் குறித்த கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் இருந்து உதவிக்கான சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு தொகுதி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டுபாயிக்கு சொந்தமான ‘ARIS-13’ என்ற குறித்த கப்பல் எரிபொருள்களை கொண்டு சென்றுள்ள போதே கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

கடந்த சில காலங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்களின் கடத்தல் நடவடிக்கை வெகுவாக குறைந்திருந்தது.

கப்பல்கள் கொள்ளையர்களின் பிரசன்னம் அதிகமிருந்த பகுதிகளை தவிர்த்தமை, சர்வதேச கடற்படைகளின் அதிகரித்த பிரசன்னம் ஆகியன இதற்கான காரணிகளாக இருந்தன.

இந்நிலையில் தற்போது இக்கடத்தல் இடம்பெற்றுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Disciplinary action against 9 Police Officers over Easter Sunday attacks

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

அமைதியான தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி