விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பல்

(UTV|COLOMBO) தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை நிறைவுசெய்து இலங்கை கிரிக்கெட் அணி இன்று(25) நாடு திரும்ப உள்ளது.

இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரினை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. எந்த ஒரு ஆசிய அணியும் தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை படைக்காத சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் இடம்பிடித்த இலங்கை கிரிக்கெட் அணியை வரவேற்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

137 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி

ஏஞ்சலோ மேத்யூஸ் தாயகம் திரும்பினார்

மேற்கிந்திய அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இராஜினாமா