துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இலங்கை கடுமையான காலநிலை பேரழிவுகளை சந்திக்க நேரிடும்.
2060 ஆம் ஆண்டாகும்போது நெல் விளைச்சல் 12-41% இனால் வீழ்ச்சியடையும்.
2050 ஆம் ஆண்டாகும்போது மீன் விளைச்சல் 20% இனால் வீழ்ச்சியடையும். வருடாந்த உட்கட்டமைப்பு வசதிகளின் இழப்புகள் 0.38 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
காலநிலை பாதிப்புக்கள் மொத்தத் தேசிய உற்பத்தியினை 3.86% ஆக குறைப்பதற்கு காரணமாக அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் காலநிலை அனர்த்த ஒன்றியத்தின் (Climate Vulnerable Forum) பொதுச் செயலாளருமான முகமது நஷீத் பங்குபற்றிய சுற்றுச்சூழல் தொடர்பான பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எனவே, காலநிலை மாற்ற சட்டத்தை விரைவாக செயல்படுத்தவும், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கைத் தடை செய்யவும், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் காலநிலை நிதியை அணுகுவதற்கான வலுவான பிராந்திய ஒத்துழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கோரினார்.
மேலும், இலங்கையின் வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களை தெளிவுபடுத்தி, தீவக மக்களுக்காக தயாரிக்கப்பட்ட வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிக்கு சர்வதேச ஆதரவைக் கோரினார்.
இந்த சாத்தியமான எதிர்கால ஆபத்தை நிவர்த்தி செய்ய இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இங்கு மேலும் வலியுறுத்தினார்.