சூடான செய்திகள் 1

இலங்கை அகதிகள் குண்டு பல்பு பயன்படுத்த தடை

(UTV|COLOMBO)-இந்திய தமிழ் நாட்டின் கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

அந்த முகாமில் உள்ள வீடுகளில் மின்சாரம் செலவாகும் குண்டு பல்புகளை பயன்படுத்திட கூடாது. மேலும் முகாமில் உள்ள கடைகளில் குண்டு பல்புகளையும் விற்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல் கட்டமாக முகாமில் உள்ள கடைகளில் குண்டு பல்புகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்

கோட்டாபயவின் ரிட் மனு தள்ளுபடி

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை