உள்நாடுவணிகம்

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய உருளைக்கிழங்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்படும் வரியை அதிகரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 55 ரூபாவாக அதிகரிப்பதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேட பொருட்களுக்கான சட்டத்தின் கீழ் குறித்த வரி அதிகரிப்பானது நான்கு மாத காலத்திற்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

SLBC யில் 1000 குத்பா பயான் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நிறைவு நிகழ்ச்சி

editor

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor