அரசியல்உள்நாடு

இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஸ்தாபிக்க வேண்டியது அவசியம் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வலியுறுத்தல்

இறக்காமம் பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகக் கருதப்படும் நீதிமன்ற நடவடிக்களை இலகுபடுத்துவதற்கான கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுலா நீதிமன்றம் ஒன்று இப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தினார்.

இன்று (16) இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறக்காமம் பிரதேச மக்கள் அம்பாறை நீதிமன்றத்திலேயே தற்போதைய வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் இம் மக்களுக்கு மொழி மற்றும் பயணத்திற்கான சிரமங்களை எதிர்கொண்டு அசெளகரியங்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

இதனால், நீதிமன்ற நடவடிக்கைகள் எளிதாகக் கிடைக்கும் வகையில், குறைந்தபட்சம் ஒரு சுற்றுலா நீதிமன்றத்தை இறக்காமத்தில் ஸ்தாபிப்பது அல்லது அக்கறைப்பற்று நீதிமன்றத்துடனாவது இவர்களின் நீதிமன்ற நடவடிக்களை இணக்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், பிரதேசத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.

-ஊடகப்பிரிவு

Related posts

‘தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு

IMF ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

பேரீச்சம் பழ விடுவிப்பில் அசௌகரியம் – சவூதியிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை

editor