வகைப்படுத்தப்படாத

இருவேறு இடங்களில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

(UTV| COLOMBO) – ஹூணுபிடிய ரயில் குறுக்கு வீதியில் கண்டைனர் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளமையால், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கண்டைனருடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பிரதம ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான கண்டைனரை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, தெமட்டகொடை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

இதனால் களணிவௌி ரயில் பாதையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, அப் பாதையிலான ரயில் போக்குவரத்து பேஸ்லைன் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே பிரதம கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

 

Related posts

டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

Petitions filed against Bill banning tuition classes on Sundays and Poya

Minister Harin asks SLC to overhaul team’s coaching staff