உள்நாடு

இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கி படுகொலை செய்த 20 வயதுடைய மகன் கைது

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குற்றத்தைச் செய்த 20 வயதுடைய உயிரிழந்தவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நான் தயார்