உள்நாடு

இரு நிபந்தனைகளுக்கு இணங்கினால் வேட்புமனுவை மீளப் பெறத் தயார் – அநுர

(UTV | கொழும்பு) – நீண்ட காலத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க விரும்பாத இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இணங்கினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகத் தயார் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான குறுகிய கால செயல்திட்டத்திற்கு உடன்பட்டு கூடிய விரைவில் புதிய தேர்தலுக்கு செல்ல இணங்கினால், அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்க தாங்களும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்கள பிரதிநிதிகள் குழுவினர்களை, நேற்று (17) கட்சித் தலைமையகத்தில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை மீளப் பெறத் தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், இந்நிபந்தனைகளை ஏற்க புதன்கிழமை (20) வரை அவகாசம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related posts

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது

மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!