உள்நாடுபிராந்தியம்

இராணுவப் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி பலி

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வெல்லவாய, ராஜமாவத்தையைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் சார்ஜென்ட் என தெரியவந்துள்ளது.

சடலம் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

” முஸ்லிம்” என்ற பதத்தை நீக்கிய சட்டமூலத்திற்கு ரவூப் ஹக்கீம் ஆதரவா? ஏன் கையொப்பம் இடவில்லை?

காலியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

editor